மக்களை திசை திருப்பி இளைஞர் யுவதிகளை ஏமாற்றி , வேலைவாய்ப்பு வாங்கிதருவதாக உறுதி வழங்கிய ஐ.தே.க கட்சியின் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்த அனைத்தது பொருட்களையும் கொழும்புக்கு இடமாற்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் அவரது வாகன ரயரைக் கூட கொழும்புக்கு எடுத்துசென்றுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
இவ்வாறான நிலையில் அவர் தற்போது நாட்டை விட்டு தப்பியோடுவது அவரது ஆதரவாளர்களிடத்தில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் நாட்டிவிட்டு தப்பியோடும் விஜயகலா மகேஸ்வரன் , விமான நிலையத்தில் உள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவியுள்ளது.






