யாழில் வீதியால் சென்ற பெண்ணின் நகை பறிப்பு- சி.சி.ரி.வி யால் மாட்டிய சோகம்

வீதியால் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் யாழ் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொம்மை வெளிப் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலி நேற்று காலை மோட்டார் சைக்கிள் சென்ற இனம் தெரியாத நபர்களினால் அறுத்துச் செல்லப்பட்டது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் யாழ். பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறைப்பாட்டினை செய்துள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸார் சம்பவம் நடை பெற்ற இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தபோது , அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கெமராவின் உதவியுடன் சந்தேக நபர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் இனம் காணப்பட்டது.

இதனையடுத்து மோட்டார் சைக்கிள் வாகன இலக்கத்தின் அடிப்படையில் சில மணி நேரத்திலேயே சந்தாக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23,27 வயதான இளைஞ்ர்கள் இருவரே இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.