யாழில் சற்று முன்னர் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் சற்று முன்னர் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த இரவு நேர தபால் புகையிரதம் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.