வன்முறையின் தீவிரம்! இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப் அதிரடியாக நிறுத்தம்

இலங்கை பூராகவும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக், வட்ஸ்அப், பேஸ்புக் மெசன்ஜர் ஆகிய பிரான சமூக வலைத்தளங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் பல பகுதிகளில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் வேகமாக தகவல் பரவி வருவதால் நிலைமை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சமூக வலைத்தளங்களை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் வைபர், ஐஎம்ஓ போன்ற உரையாடல் செயலிகள் வழமை போன்று செயற்பட்டு வருகின்றன.

பேஸ்புக், வட்ஸ்அப் நிறுத்தப்பட்டமையால் இலங்கை பயனர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

வன்முறையை தூண்டும் கருத்துக்கள் வெளியிடுவதன் காரணமாக பேஸ்புக் முடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கைக்களுக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கருத்து வெளியிட்டார்.