இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான இந்தக் குழுவில் 8 பேர் இடம்பெறவுள்ளனர்.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஆகியோரும் பாதுகாப்பு அதிகாரிகள் மூவரும் இந்தக் குழுவில் இடம்பெறவுள்ளனர்.
புதுடில்லியில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட முக்கிய அமைச்சர்களையும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி உட்பட பலரையும் அவர் சந்திப்பதற்கு ஏற்பாடாகியுள்ளது.
இன்றைய தினம் இடம்பெறும் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் தனது இந்திய விஜயம் தொடர்பில் ஜனாதிபதி தெளிவுபடுத்துவார் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.