நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கடந்த ஆண்டு 30/07/2018 அன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டும் சமூகநலத்தின் அமைச்சால் நடாத்தப்பட்ட விளையாட்டுப்போட்டி விழாவில் கலந்து கொண்டு சிறப்பாக செயற்பட்ட செயற்பாட்டாளர்களுக்கான சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கும் நிகழ்வு 04/03/2018 ஞாயிறு அன்று Community Hall, Northolt Road, South Harrow, HA2 0DN என்ற இடத்தில் திரு சொ.யோகலிங்கம் (விளையாட்டும் சமூக நலத்தின் பிரதி அமைச்சர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்) தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக Hon. Gareth Thomas MP கலந்து கொண்டார். இது எமது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டும் சமூகநலத்தின் அமைச்சிக்கு ஒரு சிறப்பையும் எமது வருங்கால செயற்பாடுகளுக்கும் செயட்பாட்டாளர்களுக்கும் ஒரு ஊக்கத்தையும் அளித்தது. அத்துடன் அங்கு வந்த செயற்பாட்டாளர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்பித்தார்.

அதை தொடர்ந்து ப.தீனதயாளன் இசை அமைத்து பாடிய தாயகப் பாடல்கள் “நம் தேசம்” எனும் பெயரில் இசைத்தட்டும் திரு. சொ. யோகலிங்கம் தலைமையில் வெளியிடப்பட்டது. இவ்இசைத்தட்டை Hon. Gareth Thomas MP (Labour Party, West Harrow constitution) வழங்க நாடுகடந்த தமிதமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளும் தொகையான கொடுரங்கள் இனஅழிப்புக் கெதிரான செயற் பாடுகளின் அமைச்சர் பத்மநாதன் மணிவண்ணன், மாவீரர் முன்னைநாள் போராளிகள் குடும்ப நலம் பேணல் அமைச்சின் பிரித்தானியத்திற்கான பொறுப்பாளர் நிமலன் சீவரத்தினமும், சமூகநலத்தின் பிரித்தானியாவிற்கு பொறுப்பான அருணாச்சலம் ராஜலிங்கம் MP யும் சில செயற்பாட்டாளர்களும் பெற்றுக் கொண்டனர்.

இன் நிகழ்வின் முக்கிய அம்சமாக கடந்த ஆண்டு நடைபெற்ற விளையாட்டு நிகழ்வின் வரவு செலவு அறிக்கை வெளியிடப்பட்டு அது சம்பந்தமான கலந்துரையாடல் நடைப்பெற்றது. மற்றும் கடந்த வருடங்களில்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டும் சமூகநலத்தின் அமைச்சால் நடாத்தப்பட்ட நிகழ்வுகள் அனைத்தின் ஒரு சாரம்சத்தை திரு .சொ.யோகலிங்கம் (விளையாட்டும் சமூகத்தின் பிரதி அமைச்சர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்) அவர்கள் விபரித்தார், மேலும் வரும் காலங்களிள் நடத்தப்படவிருக்கும் நிகழ்வுகள் பற்றியும் விபரித்தார்.

எமது அழைப்பை ஏற்று சமூகமளித்த அனைத்து உள்ளங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டும் சமூகநலத்தின் அமைச்சு சார்பாக நன்றிகளை தெரிவித்தார். அதனை தொடர்ந்து உறுதி மொழி எடுப்புடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like