வடமாகாண ஆளுநராக கிரிகெட் வீரர் தெரிவு – வெளியானது ஜனாதிபதியின் முடிவு

வட மாகாண ஆளுநர் பதவியில் இழுபறி நிலவி வந்த நிலையில் வடக்கின் ஆளுநராக கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் , இந்திய விஜயத்தை மேற்கொள்ள முன்னர் முரளியின் நியமனம் இடம்பெறவுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.

இதேவேளை முன்னதாக வடமாகாண ஆளுநராக முரளி நியமிக்கபட உள்ளதாக வெளியான செய்திகளை அவர் மறுத்திருந்ததுடன், அப்படியான எந்த தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு முரளியை அழைத்துப் பேசிய ஜனாதிபதி கோட்டாபய, வடக்கு ஆளுநர் பதவியை ஏற்குமாறு கோரியுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் வடக்கின் ஆளுநராக முரளிதரனும் நியமிக்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.