இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபயவின் மனைவி அவரது பிறந்த நாளை உறுப்பினர்களுடன் இணைந்து வித்தியாசமான முறையில் கொண்டாடிய காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மனைவி அயோமா ராஜபகக்ஷ தனது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.
இதன்போது, காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இவ்வாறு வித்தியாசமான முறையில் அவர் தனது பிறந்த நாளை கொண்டாடி பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களும் பல்வேறு வாக்குறுதிகளை பொது மக்களிடம் முன்வைத்திருந்தாலும் கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ் மக்களிடமும் வாக்குறுதிகளை வெளியிட்டுவந்தார்.
ஆட்சிக்கு வந்தால் பாரியளவிலான குற்றங்களில் ஈடுபடாத மற்றும் விசாரணைகளிலின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக. இந்நிலையில் ஆட்சிக் கட்டிலில் ஏறிய கோட்டாபய ராஜபக்ஷ பல்வேறு அரசியல் மாற்றங்களை செய்துவருகின்றார்.
இன்னமும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அவரின் நடவடிக்கைகள் அமையவில்லை. ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் பிரதமர் மஹிந்த தலைமையில் சிறிய அமைச்சரவையும் பதவிப் பிரமாணம் செய்திருக்கின்றன.
அடுத்து பொதுத் தேர்தலை நாடு சந்திக்கவிருக்கிறது. அதில் அறுதிப் பெரும்பான்மையை பெற்று தனி அரசாங்கத்தை அமைக்க வேண்டிய நிலையிலும் இவர்கள் இருக்கின்றார்கள். இதனால் இன்னும் அதிகளவில் செயல்பட வேண்டிய நிலையில் அத்தரப்பினர் இருக்கின்றனர்.
இதனால் அரசியல் கைதிகள் விடுதலையை பெரும் அஸ்திரமாக கோட்டாபய தரப்பினர் பாவிக்க கூடும். இந்நிலையில் தனது கணவர் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் கொண்டாடியுள்ள முதல் பிறந்த நாளில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ள பறவைகளை திறந்துவிட்டு கொண்டாடியுள்ளார்.
இது அரசியல் கைதிகளின் வாழ்விலும் பிரதிபலிக்குமா என கைதிகளின் குடும்பத்தினரும் சமூக நலன்விரும்பிகளும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். பறவைகள் மட்டுமல்ல நீண்டகாலமாக தமது வாழ்க்கையை தொலைத்து சிறைக்குள் வாடும் அரசியல் கைதிகளும் சிறையிலிருந்து வெளியே வந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க காத்திருக்கிறார்கள்.
ஜனாதிபதியின் மனைவி பறவைகளுக்குச் செய்ததை ஜனாதிபதி அரசியல் கைதிகள் விடையத்தில் செய்வாரா? அரசியல் கைதிகள் வாழ்வில் சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்வாரா? பறவைகள் மட்டுமல்ல கைதிகளும் கூண்டில் தான் இருக்கிறார்கள். நீதியையும் விடுதலையையும் எதிர்பார்த்து.






