தமிழ்த் தேசியத் தலைவர் யார்? கருணா வெளியிட்ட தகவல்

தமிழ்த் தேசிய தலைவர் எனக் கூறுவதற்குத் தலைவர் பிரபாகரனுக்கு மட்டும் தான் தகுதியுள்ளது வேறு எந்த ஒருவருக்கும் தகுதியில்லை என முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.

தேர்தல் காலங்களில் மேடைகளில் சிலரைத் தேசிய தலைவர் என விழிக்கின்றனர் ஆனால் எவருக்கும் எந்த தகுதியில்லை எனக்குக் கூட தகுதியில்லை நான் கூட தேசிய தலைவர் பிரபாகரனினால் வளர்க்கப்பட்டவன் . அந்த தகுதி தலைவர் பிரபாகரனுக்கு மட்டும் தான் உள்ளது எனவே தமிழ் மக்கள் சிந்தித்து செயற்படவேண்டும் என்றார்.

மட்டக்களப்பு திக்கோடை பிரதேசத்தில் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் வெற்றி தோல்வி பற்றி ஆய்வு செய்யும் மீளாய்வுக் கூட்டம் கட்சியின் பிரதி தலைவர் விக்கினேஸ்வரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கருணா அம்மான் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

படித்துப் படித்துக் கூறினோம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபஷ வெல்லப் போவதாகவும் வெல்லக் கூடிய அணியுடன் நாங்கள் பயணிப்போம் அதில் பயணிக்கின்ற போது தான் நாங்கள் வாதிட்டு எமது உரிமை கேட்பதற்கான வாய்ப்பிருக் கின்றது ஆகவே வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டோம் ஆனால் மக்கள் தெளிவடையவில்லை.

அதேநேரத்திலே தமிழர்களைக் குழிதோண்டிப் புதைக்கவேண்டும் எனச் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற சில முஸ்லிம் துவேச வாத அரசில் தலைவர்கள் சஜித் பிரேமதாசாவுடன் சேர்ந்தார்கள் இன்று சஜித் பிரேமதாசாவை கொண்டு வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் இன்று கிழக்கில் தமிழன் இருந்திருக்க முடியாது பாரிய பின்னடைவுகள் விளைவுகளைச் சந்தித்திருக்க வேண்டியிருந்திருக்கும் .

ஆனால் இன்று சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் சிங்கள மக்களின் அதிக வாக்குகளால் ஒரு ஜனாதிபதி உருவாகியுள்ளார்.

இதனை நிரூபித்துக் காட்டிய ஜனாதிபதி தேர்தல் இதுதான். கடந்த காலத்தில் 6 ஜனாதிபதி தேர்தல் நடந்திருக்கின்றது அந்த ஜனாதிபதியைச் சிறுபான்மை மக்களின் வாக்குகள் நிர்ணயித்தது.

ஆனால் இன்றைக்குப் பெரும்பான்மை மக்கள் மட்டும் போதும் வேறு இனம் தேவையில்லை என்ற கட்டத்திற்கு இந்த தேர்தல் நிரூபித்துள்ளது அதேவேளை இதுவரை முஸ்லிம் அமைச்சர் இல்லாத அமைச்சர்கள் இதுதான் இது எமக்கு பாரிய வெற்றி. இன்று மகிந்த ராஜபக்ஷ என்ன சொன்னார் ஹக்கீம், றிசாட் என ஒருவரையும் எடுக்க மாட்டேன் என அவர் வாக்குறுதியளித்தார் அதனை அவர் செய்துகாட்டியுள்ளார்.

எனவே நாங்கள் தவறுகளை எவ்வாறு திருத்தப்போகின்றோம் எதிர்காலத்தில் இவ்வாறு பிழையை விட்டுவிட்டு வந்து வேலைவாய்ப்புதா பாலம்கட்டித்தா, வீதியை போட்டுத்தா என்றால் யார் போடுவது நாங்கள் வாக்களித்தால் தான் உரிமையோடு கேட்கலாம்.

2010 ஆம் ஆண்டு தேர்தலில் சரத்பொன்சேக்காவுக்கு வாக்களிக்குமாறு சம்பந்தன் தெரிவித்தார். எல்லோரும் வாக்களித்தனர் இதற்கு அவர் இராணுவதளபதி சீருடை அணிந்து முள்ளிவாய்காலில் மக்களைக் கொன்றது அவர்தான் அவர் நாடு முழுக்க தான் யுத்தத்தை முடித்தாக தெரிவித்து வருகின்றார்.

இந்த யுத்தத்தைக் கோத்தா, மகிந்த முடிக்கவில்லை அப்படியான சரத்பொன்சேக்காவுக்கு வாக்களிக்குமாறு சம்பந்தன் சொன்னார். மக்கள் வாக்களித்தனர்.

அந்த தேர்தலில் மகிந்த ராஜபஷவுக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலே 12 ஆயிரம் வாக்குமாத்திரம் வீழ்ந்தது.

அதற்காக மகிந்த எங்களை புறக்கணிக்கவில்லை. 3200 பட்டதாரிகளுக்கு எனது கையால் வேலைவாய்பு வழங்கினேன், அவ்வாறே அதிகமான சிற்றூழியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கினோம்.

பாலங்களைக் கட்டினோம். மின்சாரம் வழங்கினோம். இவ்வாறு பாரிய அபிவிருத்தியை செய்தோம்.

ஆனால் இன்று கம்பெரலியா என்னும் திட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாசகம் எடுத்து வீதியைப் போட்டுள்ளனர். எனவே தாழுகின்ற கப்பலில் ஏறவேண்டாம். இது ஒரு அனுபவ தவறு எனவே இதனைத் திருத்திக் கொண்டு செயற்படவேண்டும்.

சம்பந்தன் ஐயா கிழக்கு மாகாணசபை தேர்தலில் 11 உறுப்பினர்களை எடுத்து 7 உறுப்பினரை எடுத்த முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சரைத் தூக்கிக் கொடுத்தார் அதன் பிரதிபலிப்பே அவர்கள் தமிழ் பிரதேசங்களிலுள்ள பாடசாலையிலுள்ள பாதுகாப்பு உத்தியோகஸ்தர் தொடக்கம் அனைத்து வெற்றிடங்களுக்கும் முஸ்லிம் 1600 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கினார்கள் .

இந்த வினை யாரால் வந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இந்தமுறை சம்பந்தன் ஐயா 13 அம்சகோரிக்கையை சஜித்திடம் கொடுத்தார் அதனை அவர் தூக்கி எறிந்தார் அதன் பின்னர் 3 நாட்கள் சத்தம் இல்லாமல் இருந்தர் பின்னர் 3 நாள் காலையில் எழுந்ததும் திடீர் என சஜித்துக்கு வாக்களிக்குமாறு தெரிவித்தார்.

ஏன் என்றால் 3 நாளிற்குள் அவருக்குப் பணப்பெட்டி கொடுத்துள்ளனர். மட்டக்களப்பு நகரில் 60 ஆயிரம் கத்தோலிக்கர்களின் வாக்கு இருக்கின்றது அவர்களும் குண்டுவைத்து எமது குழந்தைகளைக் கொன்ற சகரானுக்கு பின்னால் இருக்கின்றவர்களுக்கு வாக்களித்துள்ளனர் .

எனவே குண்டு வைத்து நமது குழந்தைகள் இறந்தும் ரோசம் வருவதில்லையா? எனவே எதிர்வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிறந்த முடிவுகளை எடுக்கவேண்டும்.

அதேவேளை எமது சமூகத்தை இன்றிலிருந்து தெளிவாக்கவேண்டும் அல்லது ஏமாற்றிவிடுவார்கள், அதேவேளை கல்முனை மக்களைப் பாராட்டவேண்டும் எனத் தெரிவித்தார்.