நாட்டில் கடந்த சில தினங்களாக சந்தையில் அரிசிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது.
அந்தவகையில் ஒரு கிலோ சிகப்பு பச்சை அரிசி 100 ரூபாவில் இருந்து 110 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அத்துடன் வெள்ளை பச்சை அரிசியின் விலையும் இதே விதமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் ஒரு கிலோ சிகப்பு மற்றும் பச்சை அரிசி 95 ரூபாவில் இருந்து 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை சில அரிசி வகைகளுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்தே அரிசிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.






