காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு பயணித்த யாழ்.தேவி தொடருந்து தடம்புரண்டடுள்ளதால் வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கல்கமுவ – அம்பன்பொல ரயில் நிலையங்களுக்கிடையிலேயே யாழ் தேவி தொடருந்து இன்று பிற்பகல் தடம் புரண்டுள்ளது. எனினும் பயணிகளுக்கு பாதிப்பு என அறிவிக்கப்படவில்லை.
தடம்புரண்டுள்ள ரயில் பெட்டிகளை சீராக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வடக்கிற்கான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.






