பாடசாலை நிர்வாகங்களுக்கு வருகிறது புதிய நடைமுறை!

நாட்டிலுள்ல அனைத்து பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டியை தவிர ஏனைய நிகழ்வுகள் ஒரு மணித்தியாலத்திற்குள் வரையறுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் ரதம்பல ஸ்ரீசுமங்கல வித்தியாலயத்திற்கு கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும விஜயம் மேற்கொண்டிருந்தபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பாடசாலைகளில் விளையாட்டு வைபவம் தவிர வேறு எந்த வைபவங்களும் 1 மணித்தியாலத்திற்குள் வரையறுக்கப்பட வேண்டும் என்குறிபிட்ட அமைச்சர், இதற்காக புதிய கல்வி கொள்கைக்கு அமைவான சுற்றறிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது பாடசாலைகளின் வகுப்பறைகள் 19ஆம் நூற்றாண்டுக்கு ஒத்ததாக அமைந்துள்ள நிலையில் 20ஆம் நூற்றாண்டுக்கான ஆசிரியர்கள் 21ஆம் ஆண்டுக்கான மாணவர்களுக்கு கல்வியை கற்பிக்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசாங்க பாடசாலைகளில் 60,000 ஆசிரியர்கள் இருக்கின்ற நிலையில் அவர்களுள் 15,000 ஆசிரியர்கள் பயிற்சி பெறாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் புதிய கல்வி கொள்கைக்கு அமைவாக அதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.