கொள்ளை அழகு… தொந்தரவு செய்த கணவன்… 5 மாதத்தில் விபரீத முடிவெடுத்த புதுமணப்பெண்!

நல்ல தோற்றம் மற்றும் வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த சுஷ்மிதா என அடையாளம் காணப்பட்ட 19 வயது பெண் ஐந்து மாதங்களுக்கு முன்புதான் விஜயேந்தர் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

சுஷ்மிதா நல்ல தோற்றத்துடன் இருந்ததால், திருமணத்திற்கு முன் அவருக்கு வேறு நபருடன் தொடர்பு இருந்திருக்கலாம் என விஜயேந்தர் சந்தேகித்துள்ளார். மேலும், அந்த நபரின் செல்போன் எண்ணை கொடுக்குமாறு சுஷ்மிதாவை வற்புறுத்தியுள்ளார்.

கணவரின் சந்தேகத்திற்கிடமான தன்மையும், மாமியாரின் வரதட்சணை கோரிக்கைகளும் தாங்க முடியாத நிலையில், அந்த இளம் பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் அறிக்கையின்படி, இறந்த மணமகளின் பெற்றோர் தங்கம், ரூ .3 லட்சம் ரொக்கம், 150 சதுர கெஜம் மற்றும் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை திருமணத்தின் போதே வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

அப்படி இருந்தும் விஜயேந்தரின் குடும்பம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.