வியாழேந்திரனின் ஆசையை அழித்தார் கருணா! வெளிவரும் பல உண்மைகள்…

புதிய காபந்து அரசின் அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க பிரதி அமைச்சுக்கள் அனைவரும் பொறுப்புக்களை கடமையேற்றுள்ளனர்.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு அமைச்சுப் பதவியோ அல்லது இராஜாங்க அமைச்சுப் பதவியோ வழங்கப்படவில்லை.

இது தொடர்பில் கடும் விசனத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வியாழேந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவிருந்ததாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் கருணா அம்மானினது நேரடி தலையீட்டினாலும் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கருணா அம்மான் சென்று அமைச்சுப் பதவியை வியாழேந்திரனுக்கு வழங்க வேண்டாம் என்றும் அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாழேந்திரனுக்கு சுயமாக சிந்திக்கும் திறன் இல்லை என்றும், அவர் மற்றவர்களின் சொல்படி நடக்கும் நபர் என்றும், அவரால் அமைச்சினை வழிநடத்த முடியாது என்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கருணா தெரிவித்திருப்பதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பசில் ராஜபக்சவை சந்தித்துப் பேசிய பிரசாந்தனும் வியாழேந்திரனுக்கு அமைச்சுப் பதவியை வழங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் வியாழேந்திரனுக்கு கிடைக்கவிருந்த அமைச்சுப் பதவியை கிடைக்கவிடாமல் அவர்கள் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு பிரதமராக மகிந்த ராஜபக்சவை மைத்திரிபால சிறிசேன நியமித்த போது வியாழேந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது.

எனினும் அது சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அந்த அரசு கலைக்கப்பட்டு மீண்டும் ரணில் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பிரதமராக மகிந்த ஆட்சியமைத்துள்ள நிலையில் மீண்டும் தனக்கு அமைச்சுப் பதவி கிடைக்கும் என்ற கனவில் வியாழேந்திரன் இருந்துள்ளார்.

எனினும் அக்கனவினை கருணா தரப்பினர் கலைத்துவிட்டுள்ளனர் என்கின்றன தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள்.

இந்நிலையில் வியாழேந்திரனுக்கு கிடைக்கவிருந்த அமைச்சுப் பதவி நீண்டநாள் கனவு மற்றும் ஆசை அதுவும் கலைந்து விட்டது பெரும் பரிதாபம் என மக்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.