மாணவர்களுக்கான காப்புறுதி, இலவச டெப் வழங்கும் திட்டங்கள் இடைநிறுத்தம்

பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதித் திட்டம் மற்றும் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான டெப் வழங்கும் திட்டம் என்பன மறு ஆய்வு செய்யப்படும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி அரசால் க.பொ.த. உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இலவச டெப் (Tab) வழங்கும் திட்டமும் பாடசாலை மாணவர்களுக்கான இலவச காப்புறுதித் திட்டமும் முன்மொழியப்பட்டு இறுதிக் கட்டத்தில் இருந்தன.

எனினும் ஐக்கிய தேசிய முன்னணி அரசு ஜனாதிபதித் தேர்தலின் பின் ஆட்சியை கைவிட்ட நிலையில் ராஜபக்சக்கள் அரசு இந்த திட்டங்களை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தை மறு ஆய்வு செய்த பின் முடிவெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சுத் தெரிவித்துள்ளது.