மனைவியின் தாக்குதலில் பரிதாபமாக பலியான முன்னாள் போராளி! வெளியான திடுக்கிடும் தகவல்

மட்டக்களப்பில் மனைவியின் தாக்குதலில் முன்னாள் போராளியான 49 வயதான பிள்ளையான் பாலசுப்பிரமணியம் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இடம்பெற்ற தகராறையடுத்து மனைவி கணவனைத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு, கிராண் கோறளை மடு முருகன் கோவில் வீதியில் வசிக்கும் இருபிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ள நிலையில் உயிரிழந்த முன்னாள் போராளியின் மனைவியை கைதுசெய்துள்ளனர்.