கொழும்பு மேயர் ரோஸிக்கு இப்படி ஒரு நிலையா? அதிர்ச்சியில் ரணில்…

கொழும்பு மாநகரசபை மேயர் ரோஸி சேனாநாயக்கவை அந்த பதவியில் இருந்து நீக்க அரசு முடிவு செய்துள்ளது.

அவர் மீது தொடர்ந்து சுமத்தப்படும் குற்றம் சாட்டுக்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ரோஸி சேனாநாயக்கவுக்கு எதிராக மற்ற எம்.பி.க்களிடமிருந்து முன்வைக்கப்படும் கோப்புகள் மற்றும் குற்றப்பத்திரிகைகளில் அதிகரிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விசேடமாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பயனற்ற நிர்வாகத்தின் காரணமாக நகரசபை நிர்வாகம் மோசமடைந்துவிட்டதாக மற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நகரசபையில் கிட்டத்தட்ட அனைவரும் அவரது நடவடிக்கைகளை நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், அவரை நீக்குவதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியினால் வெளியிடப்படும் எதிர்ப்பை தடை செய்வதற்காக அவரது வெற்றிடத்தை நிரப்ப UNP உறுப்பினர் ஒருவருக்கே வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல் அறிந்த ரணில் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன் என்ன செய்வது எனத் தெரியாடல் தடுமாறுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.