பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி : பரீட்சைகள் திணைக்களம்

எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் சகல பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பெயர், பாடவிதானங்கள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

3 மணித்தியால வினாப் பத்திரத்திரத்தை வாசிப்பதற்காக மேலதிகமாக பத்து நிமிடங்கள் பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பரீட்சையில் மோசடிகளை தவிர்ப்பதற்காக விசேட வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like