யாழ் வல்வெட்டித்துறையில் அரங்கேறிய கொடுமை ! தந்தையற்ற 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி, இனிப்புக்கள் வாங்கி கொடுத்து, கோயில் மடப்பள்ளியில் வைத்து ஆலய அர்ச்சகர் ஒருவர் தொடர்ச்சியாக பல மாதங்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் செய்து வந்தமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கோயில் அர்ச்சகர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தையற்ற தரம் 4ல் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு ஆலய அர்ச்சகரால் சீரழிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி பாடசாலைக்கு கைத்தொலைபேசி கொண்டு வந்ததை அவதானித்த ஆசிரியர்கள் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டபோதே இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக இந்த சம்பவத்தை பாடசாலை நிர்வாகம் பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவுக்கு அறிவித்துள்ளனர்.

பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவு அதிகாரிகள் மேலதிக புலன் விசாரணை மேற்கொண்டதையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அத்துடன் மாணவியிடம் கைப்பற்றிய கோயில் ஐயர் கொடுத்த தொலைபேசியும் சான்று பொருளாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வல்வெட்டித்துறை அம்மன் கோயில் அர்ச்சகர் காசு மற்றும் உணவு பொருட்களை கொடுத்து சிறுமியை நயவஞ்சகமாக கோயில் மடப்பள்ளிக்குள் அழைத்து தொடர்ச்சியாக பல மாதங்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

இதேவேளை பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் மாணவியின் சித்தப்பாவும் சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை கண்டறிந்துள்ளனர்.

அத்துடன் அர்ச்சகரின் இந்த துர்நடத்தைக்கு அவரும் உடந்தையாக இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது

இந்நிலையில் கோயில் அர்ச்சகர் மற்றும் சித்தப்பா ஆகிய இருவரையும் கைது செய்த பொலிசார் நேற்று முன்தினம் சந்தேக நபர்களை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும், சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை கலாச்சாரத்திற்கு பெயர்போன யாழ்ப்பாணத்தில், அதுவும் ஆலயத்தில் இந்த விடயம் நடந்தேறியிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like