மேயராக ஆர்னோல்ட் நிறுத்தப்பட்டால் எதிர்ப்போம் -டக்ளஸ் தேவானந்தா-

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் பதவிக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ.ஆர்னோல்ட் மீது நல்ல அவிப்பிராயம் இல்லை.

இதனால் அச் சபையில் ஈ.பி.டி.பி யாருக்கு ஆதரவு வழங்குவது என்று ஆராய்ந்து வருகின்றது என்று அக் கட்சியின் செயலாளர் நாயகமும்பா, பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவனந்தா தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

வடக்கில் உள்ள இரண்டு சபைகள் தவிர்ந்த ஏனைய சபைகள் எல்லாவற்றிலும் தொங்கு ஆட்சிதான் அமையவுள்ளது. அந்தச் சபைகளில் யார் ஆட்சி அமைக்கப் போகின்றார்களோ, அவர்களுக்கு வெளியே இருந்து ஆதரவு வழங்குவோம். மக்கள் நலன்சார்ந்து அவர்கள் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஆதரவைத் தெரிவிப்போம்.

யாழ்ப்பாணம் மாநகர சபையைப் பொறுத்த வரையில்இ நிலைமை வித்தியாசம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இருவரும் மேயர் பதவிக்கு போட்டியிட்டால் என்ன செய்வது என்பதை ஆராய்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆர்னோல்ட்டை அறிவித்திருக்கின்றது. அவர் மீது எமது கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் சிலரிடையே நல்ல அபிப்பிராயம் இல்லை.

அவர்களை நான் கட்சிக் கொள்கையையின் அடிப்படையில் செயற்படுங்கள் என்று வற்புறுதுத முடியாது. இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஆர்னோல்ட்டுக்கு எதிராக அவர்களது கட்சியினரே வாக்களிப்பார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேயர் பதவிக்கு வேறு ஒருவரின் பெயரை முன்மொழிந்தால் சாதகமாகப் பரிசீலிக்கலாம் என்றார்.