மௌனத்தை கலைத்தார் சஜித்!

ஜனாதிபதி தேர்தலில் பின்னர் சுமார் இரண்டு வாரங்களாக மௌனத்தை கடைப்பிடித்த சஜித் பிரேமதாச இன்று அதனை உடைத்துள்ளார்.

சுவிற்சர்லாந்து தூதரக பணியாளர் கடத்தப்பட்டது, மற்றும் பத்திரிகையாளர்களிற்கு வழங்கப்படும் தேவையற்ற அழுத்தங்கள் தொடர்பாக அவர் பக்கச்சார்பற்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பிலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளசஜித், அரசாங்கத்தின் சித்தாந்தங்களை பிரதிநிதித்துவப்படுத்தாத மக்களும் நிம்மதியாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் தேர்தலின் போது கோட்டாபய அளித்த உறுதிமொழிகளுக்கு முரணானது என்றும் சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நோக்கி நாட்டின் புதிய அரசாங்கம் எந்திரத்தை கையாள்வதில் இருந்து விலகுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சுவிஸ் தூதரக பணியாளரை கடத்தியது இராஜதந்திர உறவுகளின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாள் என்றும் சஜித் சுட்டிக்காட்டிய அவர் , நாட்டின் இடம்பெறும் சில சம்பவங்கள் சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களை தேவையற்ற அழுத்தத்திற்கு உட்படுத்துவது கருத்துச் சுதந்திரத்திற்கும் தகவல் அறியும் உரிமைக்கும் எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் நாட்டின் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த உடனேயே அதன் ஆணையை நிறைவேற்ற நேரம் தேவைப்படுவதால் அதை விமர்சிப்பது நியாயமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறிகின்றபோதும், , சில சம்பவங்கள் நடைபெறுவதால் எதிர்க்கட்சி இனி அமைதியாக இருக்க முடியாது என்றும் சஜித் தெரிவித்துள்ளார்.