சம்பந்தனை வெளியேற்ற சதித்திட்டம்! தீவிரமாக ஆராயும் ஜ.தே கட்சி?

தற்போது இரா.சம்பந்தன் பாவனையிலுள்ள எதிர்கட்சி தலைவர் வதிவிடத்தை கேர்ருவதா அல்லது அவரையே அங்கு தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிப்பதாவென ஜக்கிய தேசியக்கட்சி ஆராய்ந்துவருகின்றது.

கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பயன்பாட்டுக்கு பெற்றுகொடுக்கப்படுமென அறிய முடிகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது குறித்த அலுவலகத்தை பயன்படுத்தியிருந்த போதும், இதுவரையில் உத்தியோகபூர்மாக கையளிக்கவில்லை எனவும் தெரிவியவருகிறது.

எவ்வாறாயினும் குறித்த அலுவலகத்தை எதிர்வரும் புதனன்று ஐ.தே.கவுக்கு பெற்றுகொடுப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

இந்நிலையில் தற்போது திருகோணமலையில் தங்கியிருக்கின்ற இரா.சம்பந்தனிடம் எதிர்கட்சி தலைவர் வாசஸ்தலம் தொடர்பில் பேசப்படவுள்ளதாக தெரியவருகின்றது.