நெஞ்சை உருக்கும் சாவடைந்த சிங்கள இளைஞனின் குடும்ப பின்னணி

தெல்தெனிய திகனவில் முஸ்லீம் இளைஞர்களின் தாக்குதலுக்க இலக்காகி உயிரிழந்த சிங்கள இளைஞரின் குடும்பப் பின்னணி வெளியாகியுள்ளது.

லொரி சாரதியாக இருந்த அவருடைய குடும்ப பின்னணி வருமாறு:-

கால் ஊனமுற்ற தந்தை. கடுமையான நோயினால் படுக்கையில் கிடக்கும் தாய். ஒரு மாதத்திற்கு முன் மரணித்த தனது குழந்தையின் பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத மனைவி. மூளை வளர்ச்சி குன்றிய தங்கை. இது தான் அந்த இளைஞனின் குடும்பம். அவர்களை பராமரிக்கவே இரவு பகலாக உழைத்தார் அந்த இளைஞன்.

பிந்தி கிடைத்த தகவலின் படி, பிரதேச உலமா சபை மற்றும் ஊரார் ஒன்றிணைந்து சுமார் 3 இலட்சம் ரூபாய்கள் சேகரித்து உடனடியாக அக்குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளனர். இன்னும் பத்து இலட்சம் சேகரித்து தருவதாக வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.
சம்பவத்துடன் தொடர்புடைய முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடி தலைமறைவாக இருந்த ஒரு இளைஞனை ஊரார்களே சுற்றி வளைத்து சரணடையச் செய்துள்ளனர்.

இறுதிச் சடங்குகள் தற்போது இடம்பெறுகின்றன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களை எம்மிடம் ஒப்படைக்குமாறும் சிலர் ஆர்ப்பாட்டம் செய்வதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like