இலங்கையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட சகல பாடசாலைகளுக்கும் நிர்வாக வசதிக்காக பாடசாலை முகாமையாளர்களை (School managers) எதிர்காலத்தில் நியமிக்கப் போவதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

“பாடசாலைகளில் தனி ஒரு அதிபரினாலோ அல்லது உப அதிபரினாலோ சகல நிர்வாக நடவடிக்கையினையும் மேற்பார்வை செய்வதென்பது மிகவும் கடினமான காரியமாகும்.
ஆகவே, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு முகாமையாளர் ஒருவரையும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைக்கொண்ட பாடசாலைகளுக்கு பிரதான முகாமையாளருடன் உதவி முகாமையாளர் ஒருவரும் நியமிக்கப்படுவர். இந்த திட்டத்தினை மிக விரைவில் அமுல்ப்படுத்துவதற்கு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம்.” என்றார்.