அனுராதபுரம் அரச வைத்தியசாலையில் மருத்துவராக கடமையாற்றும் பெண் மருத்துவர் தொடர்பில் பல விமர்சனங்கள் எழுத்துள்ளன.
குறித்த பெண் மருத்துவர் நோயாளிகளிடம் மரியாதை குறைவாக பேசுவதோடு அவர்களை உதாசீனப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அவரிடம் செல்லும் நோயாளிகளிடம் மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்ளும் அவர் நோயாளர்களிடம் காரணமின்றி எரிந்துவிழுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோயாளிகள் யாராவது அவரை மிஸ் என அழைத்தால் தன்னை டொக்டர் என அழைக்கவேண்டும் என்றும் தான் ஒன்றும் இங்கு மிஸ் இல்லை எனவும் கூறி அவர் நோயாளிகளிடம் எரிந்துவிழுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் ஒரு மருத்துவரிடம் இருக்கவேண்டியது பொறுமையும் அன்பான அரவணைப்புமே ஆகும் என சுட்டிக்காட்டியுள்ள அவர்கள்,ஆனால் குறித்த வைத்தியரிடம் அதற்கான எந்த அடையாளமுமே இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே குறித்த பெண் வைத்தியரை இடம்மாற்றி சேவைமிகு மனப்பான்மையுடன் கடமையாற்றும் வைத்தியரை அனுராதபுரம் அரச வைத்தியசாலைக்கு நியமிக்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளனர்.






