கோட்டாபய மோடி சந்திப்பில் நிகழ்ந்த முக்கிய விடயம்! வெளிவராத புது தகவல்

நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தனது முதலாவது அரச முறைப்பயணமாக இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந், பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல முக்கியஸ்தர்களுடன் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஜனாதிபதி கோட்டபாய ரஜபக்க்ஷ தொடர்பில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது எந்தவொரு நாட்டின் இரு தலைவர்கள் சந்திக்கும்போதோ அல்லது அரசமுறை பயணங்களின்போதோ இருவருக்கும் இடையில் மொழிபெயர்பாளர்கள் இருப்பதுதான் வழக்கம்.

இதற்கு முன்பும் இலங்கை ஜனாதிபதிகள் உத்தியோக பூர்வ வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும்போது அவர்களுடன் மொழிபெயர்ப்பாளர்களும் உடன் செல்வார்கள்.

ஆனால் வழமைக்கு மாறாக ஜனாதிபதி கோட்டாபய மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கும் இடையிலான நேற்றைய சந்திப்பின்போது மோடிக்கு மட்டுமே மொழி பெயர்ப்பாளர் காணப்படுகின்றார். ஜனாதிபதி கோட்டாவுடன் எந்தவொரு மொழிபெயர்ப்பாளரும் இல்லை.

இந்நிலையில் இது கோட்டாபாயவின் ஆளுமையினை வெளிப்படுத்துவதோடு , அவரது ராஜதந்திர நகர்வாகவும் பலராலும் அவதானிக்கப்பட்டுள்ளது.

ஏனேனில் இந்தியப்பிரதமருடன் பேசப்பட்ட விடயங்கள் கோட்டாபாயவிற்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அவர் மோடியுடன் என்ன பேசினார் என்பது மற்றவர்களுக்கு தெரியாது.

இதேவேளை நரேந்திர மோடியுடனான தனது சந்திப்பில் பேசப்பட்டவிடயங்கள் வெளியே செல்லாமல் காப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மொழிபெயர்ப்பாளரை தவிர்த்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.