கனடா செல்ல புறப்பட்டவர் விபத்தில் உயிரிழப்பு

யிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓமந்தையில் கடந்த வாரம் இரவு முச்சக்கர வண்டி – வான் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.

கனடா செல்ல தயாரான நிலையில் உறவினருக்கு சொல்லிவிட்டு திரும்பி வந்த வேளையில் விபத்தில் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை 29ஆம் திகதி கிளிநொச்சியிலுள்ள உறவினர்களுக்கு கடனாவிற்கு செல்வதற்கு விசா கிடைத்துவிட்டது. டிசம்பர் 2ஆம் திகதி கனடாவிற்கு செல்லவுள்ளதாக தகவல் தெரிவித்துவிட்டு திரும்பியுள்ளார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

வவுனியா குட்சைட் வீதியிலுள்ள வீட்டிற்கு தனது கணவருடன் முச்சக்கரவண்டியில் திரும்பிக் கொண்டிருந்தபோது இரவு ஓமந்தை – விளக்குவைத்தகுளம் பகுதியில் வீதியில் படுத்திருந்த மாடு ஒன்றுடன் எதிரே வந்த வான் ஒன்று மோதி நிலை தடுமாறிய வான் வவுனியாவிற்கு சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.

இதன்போது கனடாவிற்கு செல்லத்தயாராகிய இரமணிசுந்தர் இராஜசுலோசனா (வயது 62) படுகாயமடைந்த நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளார். இவரது கணவர் காயமடைந்து சிகிச்சைபெற்று வருகின்றார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like