ஜனாதிபதி கோட்டாபயவின் திடீர் முடிவு! அதிர்ச்சியில் அமைச்சர்கள்

புதிதாக வாகனங்கள் கொள்வனவு செய்வதனை ஜனாதிபதி செயலகம் நிறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அமைச்சுக்கள் மற்றும் அமைச்சுகளின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு வாகன கொள்வனவையே செயலகம் இவ்வாறு நிறுத்தியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் ஏதாவது அமைச்சிற்கு வாகன குறைப்பாடுகள் காணப்படுமாயின் ஜனாதிபதி செயலகத்தில் உள்ள மேலதிக வாகனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் செலவுகளை மட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை அமைச்சுகளுக்கு வாகனங்கள், போக்குவரத்து, கட்டட வசதிகள் ஆகியவைக்காக மேற்கொள்ளப்படும் செலவுகள் உட்பட அனைத்து தேவையற்ற செலவுகளை தவிர்க்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like