லோன் கொடுக்க மறுப்பு.. வங்கி மேலாளரின் அறைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்து நபர் செய்த செயல்..! பதற வைக்கும் காட்சி

கோவையில் பிரபல தனியார் வங்கியில் நபர் ஒருவர் துப்பாக்கி, கத்தியுடன் சென்று ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இராமநாதபுரம் சுங்கம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது, குறித்த வங்கியில் 40 லட்ச ரூபாய் வரை லோன் வாங்கி கொடுப்பதாக கூறி இடைத்தரகர் குணாளன் என்பவர், 3 லட்சம் ரூபாய் வெற்றிவேலன் என்பவரிடம் வாங்கியுள்ளார்.

ஆனால், நீண்ட நாட்கள் ஆகிய காரணத்தால், ஆத்திரமடைந்த வெற்றிவேலன், வங்கியில் இடைத்தரகர் குணாளனுடன், தலைமை மேலாளர் சந்திரசேகர் என்பவர் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் நுழைந்து அவர்களை தாக்கியுள்ளார்.

இதில், அங்கிருந்த ஊழியர்களுக்கும், தலைமை மேலாளர் சந்திரசேகருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like