காணாமல் போனோர் பணியகத்தின் பேச்சாளர் அடுத்தவாரம் அறிவிப்பு

காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்கள் அடுத்தவாரம் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். கடந்த மாதம் 28ஆம் நாள் காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராக சாலிய பீரிசை நியமித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அதன் ஏனைய உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களையும் வழங்கினார்.
இந்தநிலையில், காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்கள் ஏழு பேரும், அடுத்தவாரம் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இதன் பின்னர், ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.

இதன்போது பணியகத்தின் பேச்சாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று, பணியகத்தின் பேச்சாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like