முச்சக்கர வண்டியில் தொங்கும் குப்பைகூடை – ஓட்டுநரை பாராட்டும் பயணிகள்!

தென்னிலங்கை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தொடர்பில் பலரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.

குறித்த முச்சக்கரவண்டியில் குப்பை கூடை ஒன்றை பிரத்தியகமாக உள்ளது.

இது தொடர்பில் குறித்த முச்சக்கரவண்டிசாரதி தெரிவிக்கையில்,

தனது முச்சக்கரவண்டியில் பயணம் செய்யும் பயணிகள் ஏதாவது சாப்பிடுவார்கள் அதில் மிஞ்சும் கழிவை வெளியில் தூக்கி எறிவார்கள் இவ்வாறு என் கண் முன்னால், இந்த சூழலுக்கு சென்றுசேரும் குப்பைகளை சரிசெய்ய நினைத்தேன். அதன் காரணமாக தன்னுடைய ஆட்டோவில் ஒரு குப்பை கூடை ஒன்றை பிரத்தியோகமாக நிறுவியுள்ளதாக கூறியுள்ளார்.

பயணிகள் தங்கள் பயணத்தின்போது அவர்கள் பயன்படுத்திய பொருட்களின் குப்பையை இந்த கூடையில் போடலாம் என்றும், மாலையில் வீடு திரும்பியதும் அல்லது குப்பை கொட்ட அரசு ஒதுக்கியுள்ள இடங்களை தாண்டும் பொழுது சேகரித்த குப்பைகளை அங்கு கொட்டிவிடுவதாகவும் குறித்த முச்சக்கரவண்டி சாரதி கூறியுள்ளார்.

இந்நிலையில் அவரின் முச்சக்கரவண்டி புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றதோடு, குறித்த சாரதிக்கு பலரும் பாராட்டுக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

நாமும் நம் சுற்றுச்சூழலை பாதுகாப்பாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க இதுபோன்ற முறைகளை கையாளலாமே.