வேலணையில் பரிதாபமாக பலியான இளைஞன்- தலைக்கவசம் அணியாததால் ஏற்பட்ட சோகம்!

வேலணை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் வினோகரன் வசிகரன் என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் நாரந்தனையில் ஒருவரை இறக்கிவிட்டு திரும்பி வரும் சமயம், சரவணை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியோர மாமரம் ஒன்றில் மோதியுள்ளது.

விபத்தில் தலை சிதறிய நிலையில் உடனடியாக அவர் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை இந்த விபத்தின்போது குறித்த இளைஞர் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.