முல்லைத்தீவு பெண்ணிடம் பல இலட்சங்களை சுருட்டிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்! வெளியான அதிர்ச்சிக் காணொலி

இலங்கையில் இருந்து பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு தமிழ் மக்களிற்கு குரல் கொடுக்க ஜெனீவா செல்கின்றேன் என கூறி புறப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர் சஜீவன் சண்முகலிங்கம் வன்னி யுத்தத்தில் தனது கணவன் காணாமலாக்கப்பட்ட பெண் ஒருவரை ஏமாற்றி பல இலட்சங்களை திருடியுள்ளார்.

முள்ளியவளையைச் சேர்ந்த கணவனைத் தேடியலையும் பெண்ணை தான் ஜெனீவாவில் மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துகொள்ளச்செல்லும் போது தன்னுடன் அழைத்துச்செல்வதாக சுவிட்சர்லாந்தில் வாழும் சகோதரியிடம் சுமார் 25 லட்சங்களை ஏமாற்றியுள்ளான்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கச் செல்கின்றோம் என செல்லும் இவர்கள் செய்யும் மோசடிகள் சிறந்த உதாரணம் ஆகும்.

குறித்த பெண்ணுக்காக 25 லட்சம் பணத்தை வழங்கியிருப்பதும் வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் தனது கணவனை இழந்து சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள அகதிச் சகோதரியாகும்.

பணத்தை கொடுத்த பெண் குறித்த வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர் சஜீவன் சண்முகலிங்கத்தை தொடர்பு கொண்டு விபரம் கோரியபோது முன்னுக்கு பின் முரனான தகவல்களை வழங்கியுள்ளார்.

அதனடிப்படையில் குறித்த கணவன் காணாமலாக்கப்பட்ட பெண்ணிற்காக தான் 5000 பிராங்குகளை கொடுத்து கடிதத்தை பெற்று வீசாவிற்கு விண்ணப்பித்தபோதும், குறித்த பெண்ணின் பெயர் தடை செய்யப்பட்டுள்ளதால் வீசா கிடைக்காமல் போனதாகவும், தடை பட்டியிலிருந்து பெயரை நீக்குவதற்கு அரசியல் பிரபலங்களால் மாத்திரமே முடியும் என்றும் கூறுகின்றார்.

அதாவது குறித்த வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர் சஜுவன் சண்முகலிங்கத்தின் அடுத்த இலக்கு சுவிட்சர்லாந்து தூதரக வீசாவிற்கான தடைப்பட்டியிலிலிருந்து பெயரை நீங்குவதற்காக அப் பெண்ணிடமிருந்து மேலதிக பணத்தினை பெற்றுக் கொள்வதாகும்.

பெறுமதி மிக்க ஜெனிவாவின் நிலை தமிழர்களால் கேள்விக்குள்ளாவது மிகப் பெரும் வேதனை எனக் கூறப்படுகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like