இளைஞர் தீக்குளிப்பு

பென்னாகரம் அருகே காவல்நிலைய வளாகத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த மஞ்சாரப்பட்டியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இவருக்கும், மனைவி பழனியம்மாளுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்நிலையத்தில் பலமுறை ஆசைத்தம்பி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் விரக்தியடைந்த ஆசைதம்பி, நேற்று (02-03-2018) ஏரியூர் காவல் நிலைய வளாகத்திற்கு உள்ளேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது சடலத்தை கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் நிலையத்திற்கு உள்ளேயே இளைஞர் ஒருவர் தீக்குளித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like