யாழ் நீதிமன்றத்தில் குரங்குகள் அட்டகாசம்!

யாழ்ப்பாணத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக நீதிமன்ற செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது குரங்கு கூட்டம் ஒன்று நீதிமன்ற வழக்கை நிறுத்தியுள்ளது. நீதிமன்ற கூறையின் மீது குரங்குகள் ஏரி கூச்சலிட்டமையினால் வழக்கு விசாரணைகள் நிறுத்தப்பட்டு, குரங்குகளை துரத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக யாழ்ப்பாண நகரில் குரங்குகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளமையால், அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளது.

குரங்கு கூட்டங்களினால் அதிகமாக பாதிக்கப்படுவது யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் அதற்கு அருகில் உள்ள அரசாங்க அலுவலகங்களாகும்.

இதன்காரணமாக நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குரங்குகளை துரத்துமாறு அரசாங்க உயர் அதிகாரிகளிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்த போதிலும், அதனை அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

Image result for யாழ் நீதிமன்றத்தில்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like