மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

க.பொ.தராதர சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் மாணவர்கள் பரீட்சைகள் சட்ட திட்டங்களை மதிக்காது, தகாத முறையில் நடந்துக்கொள்ளல் மற்றும் ஏனைய மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்களின் பரீட்சை முடிவுகளும் இரத்துச் செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதி சாதாரண தர பரீட்சைகள் நிறைவடையவுள்ள நிலையில், பரீட்சை நிலைய கண்காணிப்பாளர்களுக்கு இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இதேபோல, நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாிகளுக்கு இந்த விடயம் குறித்து அறிவிக்கபட்துள்ளது .

எனவே பரீட்சை நிலையங்கள் அனைத்திலும் பொலிசார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.