யாழில் இன்று பட்டப்பகலில் இடம்பெற்ற சம்பவம்! பொலிஸாரை கண்டதும் தலைதெறிக்க ஓடிய ரௌடிகள்

இன்று மதியம் யாழ்ப்பாணம் சுதுமலை வடக்கு, மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது ரௌடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது அங்கு வந்த பொலிசாரை கண்டதும் ரௌடிகள் மோட்டார் சைக்கிள்களை போட்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.

இரண்டு மோட்டர் சைக்கிளில் சென்ற ஆறு ரௌடிகள், வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அத்துடன் அவர்கள் தாக்குதல் நடாத்திவிட்டு திரும்பி வரும்போது, வீதியில் எதிர்ப்பட்டவர்களை வாளை காட்டி மிரட்டியபடி வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் திடீரென பொலிசார் எதிரே வந்ததும், மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ரௌடிகள் தப்பிச் சென்று விட்டனர்.

இதனையடுத்து ரௌடிகளின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like