கோட்டாபயவின் கண்டிப்பான உத்தரவு! கலக்கத்தில் அரசாங்க திருடர்கள்

அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வரி நிவாரணம் பொது மக்களுக்கு உண்மையிலேயே சென்றடைந்துள்ளதா என்பதை கண்டறியுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

இதன்போதே இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் தொழில் வாய்ப்பிற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் இதன் பாது கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்தினைத் தொடர்ந்து விசேட வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

வழமையாக பல அரச அதிகாரிகள் பொது மக்களிற்கு நிவாரணம் வழங்கும் பொது அதிகளவில் திருடிவிட்டு கொடுப்பதும் அதை யாரும் கண்டு கொள்ளாத நிலை இருந்தது இவ் அறிவிப்பால் திருட்டு அரசியல் வாதிகள் உட்பட அரசியல் வாதிகள் பலர் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த அரசாங்கத்தில் திருட்டில் கொடி கட்டிப் பறந்த அமைச்சர் என்றால் முன்னாள் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தன என்றால் மக்கள் அடங்கலாக சகலருக்கும் தெரிந்த பிரபல திருட்டு அமைச்சர் என மக்கள் குறிப்பிடுகின்றனர்.