கறுப்பு நிற ஆடையில் சென்றதால் வெளியேற்றப்பட்ட சிலாபம் பிரதேச சபை உறுப்பினர்

சிலாபம் பிரேதச சபை கூட்டத்தில் கறுப்பு நிற ஆடையில் கலந்துகொள்வதற்கு அனுமதியில்லை என சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் ஜே. கோகிலநாத் சிங்கிற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் ஜே.என். ஜனித்த தேவப்பிரிய எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

சிலாபம் பிரதேச சபையின் 21 ஆவது அமர்வு நேற்று இடம்பெற்ற நிலையில் அதில் கலந்துக் கொள்வதற்காக சென்ற பிரதேச சபை உறுப்பினருக்கே இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கூட்டத்தெடரில் கலந்துக் கொள்ளாமல் வெளியேறியுள்ள குறித்த உறுப்பினர் புத்தளத்திலுள்ள சர்வமத குழுவின் தலைவர் சுந்தரம் குருக்களிடம் முறைபாடொன்றையும் அளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பிரதேசசபை உறுப்பினர் கூறுகையில்,

14 வருடங்களாக ஐயப்ப தரிசனம் மேற்கொண்டுவருகின்றேன் ,கடந்தவருடமும் ஐயப்பன் தரிசனத்தை மேற்கொள்ள மாலை அணிந்திருந்தேன் . அப்போது நான் கறுப்பு நிற ஆடைகளை அணிந்தே பிரதேச அமர்வுகளில் கலந்துக் கொண்டேன். ஆனால் அப்போது எனக்கு எவ்வித எதிர்புகளும் தெரிவிக்கப்படவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னரான முதல் அமர்வே நேற்று இடம்பெற்றபோது தன்னை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் ஜே.என். ஜனித்த தேவப்பிரிய அனுமதிக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் சர்வஜன மத குழுவின் புத்தளம் பகுதி தலைவரிடமும் முறைப்பாடளித்துள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை குருணாகல் பிரதேசத்தின் தேர்தல் ஆணைக்குழுவிடமும் முறைப்பாடளிக்க தீர்மானித்துள்ளளதாக பாதிக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.