நித்தியானந்தாவின் அடுத்தகுறி யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலாம் !

கடந்த சில நாட்களாக இந்திய ஊடகங்களில் பேசுபடுபொருளாக மாறியுள்ளார் இந்தியாவின் நித்யானந்தா சுவாமி.

தற்பொழுது தலைமறைவாகியுள்ள அவர் அவ்வப்போது வீடியோக்களில் தோன்றி சிலபல குபீர் குண்டுகளை வீசிவருகிறார்.

அந்தவகையில் அண்மையில் அவர் கைலாசா நாடு என்ற கற்பனையை உருவாக்கியதில் பெரிதும் பேசப்பட்டிருந்தார்

இந்நிலையில் தனிநாடு எங்கே அமைக்கப்போகிறீர்கள் என்று கேள்வி எழுந்த நிலையில், சிவத்தை உணர்ந்தால், உங்களுக்குள் கைலாசா உருவாகும் என்று கூறி, கைலாசா தனிநாடு கதைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

எனினும் , தனது அடுத்த டார்கெட் இலங்கையில் உள்ள நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் என நித்யானந்தா வெளிப்படையாக அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்திற்கு நித்யானந்தா அனுப்பிய கடிதத்தில், தன்னையும் தனது சீடர்களையும் அழித்தொழிக்கும் வேலையில் இந்தியாவில் சில அரசியல் அமைப்பும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார்.

இவ்வாறான நிலையில் தனது அடுத்த டார்கெட் இலங்கையில் உள்ள நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் என அவர் கூறியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. .

Get real time updates directly on you device, subscribe now.

You might also like