இது பௌத்த நாடு! யாழில் பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு

இது பௌத்த நாடு. பொது மக்களிற்கு தமது சொந்த மதங்களை பின்பற்றுவதற்கான உரிமையுள்ளது. அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவது படையினரின் கடமையாகும்” என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில் புலனாய்வு அமைப்புகள் ஆற்றவேண்டிய முக்கிய பங்களிப்புகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்க விஜயம் மேற்கொண்டிருந்த அவர், படையினர் முன்னிலையில் உரையாற்றிய போதே அவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“விடுதலைப்புலிகள் புத்துயிர் பெறச்செய்ய முயலும் அதேவேளை, தங்கள் மதத்தினை பிழையாக விளங்கிக்கொண்டுள்ள தீவிரவாத குழுவொன்று நாட்டின் அமைதி நிலையை குழப்புவதற்கு முயற்சிக்கப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் தீவிரவாத சக்திகள் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை அழித்துள்ளதுடன் சந்தேகத்தையும், அச்சத்தையும் உருவாக்கியுள்ளனர்.

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு யார் காரணம் என்பதைக் கண்டறிய வேண்டும்.

இதேவேளை, இது பௌத்த நாடு. பொது மக்களிற்கு தமது சொந்த மதங்களை பின்பற்றுவதற்கான உரிமையுள்ளது. அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவது படையினரின் கடமைகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.