ரயில்களில் பயணம் மேற்கொள்வோருக்கு விரைவில் வருகிறது மகிழ்ச்சியான செய்தி!

ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு விரைவில் முற்கொடுப்பனவு அட்டை வழங்கப்பட உள்ளது.

இந்த தகவலை ரயில் சேவை இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி குறித்த செயற்பாடுகளுக்கு தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த யோசனை அமைச்சரவைக்கு உடனடியாக சமர்ப்பிக்கப்பட்டு அனுமதியை பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.