இராணுவத்தின் புதிய படத்தில் விடுதலைபுலிகளின் நிழலா? வெடித்தது புதிய சர்ச்சை!

நாட்டின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதை தொடர்ந்து நாடு முழுவதிலும் வீதிச் சுவர் சித்திரங்கள் வரையப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தென்னிலங்கையில் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள சுவர்களுக்கு நிறந்தீட்ட ஆரம்பித்த இளைஞர்கள், அதில் சுவர்ச் சித்திரங்களையும் வரைந்து வருகின்றனர்.

அவ்வாறு வரையப்பட்டுள்ள ஓர் சித்திரமானது பலரது கவனங்களையும் ஈர்த்துள்ளது.

ஏனெனில் குறித்த சித்திரமானது தமிழீழ விடுதலைப்புலிகளினால் மட்டுமல்லாது ஈழத்தமிழ் மக்கள் அனைவராலும் மதிக்கப்படுகின்ற மாவீரர் வணங்கங்களுக்கு விடுதலைபுலிகளால் பயன்படும் சித்திரத்தினை ஒத்ததாக குறித்த சுவர் சித்திரம் அமைந்துள்ளது.

மாவீரர்களுக்காக பயன்படுத்தப்படுகின்ற குறித்த சித்திரத்தில் காயம்பட்ட போராளியை ஏந்தியிருக்கின்ற போராளியின் முன்னால் துப்பாக்கி காணப்படும் ஆனால், குறித்த சுவர் சித்திரத்தில் அது கிடையாது என்பதும் குறிப்பிட்டு சொல்லப்படவேண்டிய விடயம்.

இந்நிலையில் இராணுவத்தின் புதிய படத்தில் விடுதலைபுலிகளின் நிழலா என சமூக ஊடகங்களில் பலரும் குறித்த சித்திரத்தினை பகிந்துவருகின்றனர்.

இதேவேளை குறித்த வீதிச் சுவர் சித்திரங்கள் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.