13 வயது மாணவியுடன் குடும்பம் நடத்திய 19 வயது இளைஞர்-நீதிமன்றம் கொடுத்த தண்டனை!

திஸ்ஸமகாராம பிரதேசத்தில் 13 வயதுடைய மாணவியை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்த இளைஞரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி வரை குறித்த இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு தமுத்தேகம நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் மஹிந்த கித்சிறி டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

இகிரிவெவ தமுத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் தமுத்தேகம நகரில் பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருடன் காதல் தொடர்பை கொண்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் இம்மாணவியை பெற்றோருக்கு தெரியாமல் திஸ்ஸமகாராம பிரதேசத்திலுள்ள தனது நண்பன் ஒருவனின் வீட்டுக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதனையடுத்து மாணவியை காணாத பெற்றோர் தமுத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், இச்சிறுமி தனது காதலனுடன் தனது காதலனின் நண்பர் ஒருவரின் வீட்டில் திஸ்ஸமகாராம பிரதேசத்தில் இருப்பதாக தனது பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர்களை தமது வீட்டுக்கு அழைத்த சிறுமியின் பெற்றோர் இருவரையும் தமுத்தேகம பொலிசில் ஒப்படைத்தனர்.

அதன்போது இளைஞரை கைது செய்த தமுத்தேகம பொலிசார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தியபோது அவரை விளக்கம்றியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை குறித்த இளைஞர் போதைவஸ்துக்கு அடிமையானவர் என்றும்,எவ்வித தொழிலும் இல்லாதவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.