நம்பமுடியாத வகையில் அமுலுக்கு வரவுள்ள அத்தியாவசிய பொருளொன்றின் விலைகுறைப்பு!

இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவு மீதான ஒருங்கிணைந்த வரியை நீக்கி டிசம்பர் 14 முதல் அமுல்படுத்தும் அரசாங்கத்தின் முடிவுக்கு நன்றி தெரிவித்த அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் (ஏசிபிஓஏ) பாணொன்றின் விலையை ரூ .50 வரை குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த பேக்கரி உரிமையாளர் சங்கத் தலைவர் என்.கே.ஜெயவர்த்தன, மக்களை கருத்தில் கொண்டு இந்த வகையான துணிச்சலான முடிவை முந்தைய அரசாங்கம் ஒருபோதும் எடுக்கவில்லை..

“இரண்டு முக்கிய இறக்குமதியாளர்களிடையே கோதுமை மாவு ஏகபோக உரிமம் காணப்பட்டது.. கோதுமை மாவு மீதான ஒருங்கிணைந்த வரியை நீக்குவதன் மூலம், பாண் விலை உட்பட அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகளும் குறைக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் புதிய கோதுமை மாவு இறக்குமதி நாட்டிற்கு வரும் என்றும், அதன் பிறகு, பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

“கோதுமை மாவு வரிகளை குறைப்பதன் மூலம் அரசாங்கம் வருவாயைப் பெற்றிருக்க மாட்டாது, ஆனால் கோதுமை மாவு ஏகபோகத்தை உடைக்கும் ஒரு துணிச்சலான முடிவை எடுத்தது” என்று ஜெயவர்த்தன மேலும் கூறினார்.

தற்போது இலங்கையில் ஒரு இறாத்தல் பாணின் விலை ரூபா 65 இற்கு விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.