கிளிநொச்சி பளையில் மணல் கொள்ளைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும், பெண்களின் தலை முடிகளை இழுத்து தள்ளி பளைப் பொலிஸார் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் மணல் அகழ்வுக்கு உள்ளாலும் கள்ளாலும் அரசு ஊக்கமும் உடந்தையும் என்பது மறைமுகமான விடயத்தை இன்று பளைப் பொலிஸார் நிருபித்துள்ளதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் அவர்களின் இந்த நடவடிக்கை நீடிக்குமானால் தமது பகுதி வெகு விரைவில் அழிந்து விடும் என பிரதேசவாசிகள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை ஜனநாயக முறைப்படி எந்தவொரு ஆர்ப்பட்டமும் இல்லாமல் மக்கள் முன்னெடுத்திருந்த இப்போராட்டத்தில் மனிதாபிமானமற்ற முறையில் பொலிசார் நடந்துகொண்டமைக்கு பலரும் விசனங்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் பொலிசாரின் அராஜகத்தினால் கீழே தள்ளப்பட்டுள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உறுப்பினர் ஒரு மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.






