கோகலை மேல் நீதிமன்றத்துக்கு வழக்கு நடவடிக்கைக்காக வந்திருந்த பெண்ணொருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவரே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
குறித்த பெண் தாபரிப்பு வழக்குக்காக நீதிமன்றத்துக்கு வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






