பட்டதாரிகள் அனைவருக்கும் அரச வேலை

சகல பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பை வழங்குவதே அரசின் கொள்கை என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்..

கொழும்பில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது…

கட்சி பேதம் இன்றி பட்டதாரிகள் அனைவருக்கும் தொழில்வாய்ப்பு வழங்கப்படும்.

அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உறுதிமொழி அளித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்காக வீடமைப்பு மற்றும் நிவாரண வாகன கடன் வசதி திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும். ஊடகவியலாளர்களை பாதுகாப்பது அரசின் பொறுப்பாவதுடன் இந்த நிவாரண திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.