தேசிய ரீதியில் சாதித்த இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மாணவர்கள்! நீங்களும் வாழ்த்தலாமே..!!

தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற கர்நாடக சங்கீதப் போட்டியில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவர்கள் இருவர் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

ஆண்களுக்கான தனியிசை கனிஸ்ட பிரிவுப் போட்டியில் ஜோ.கிஷாந்த் என்ற மாணவனும் சிரேஷ்ட பிரிவில் ம.சனோஜிகன் என்ற மாணவனுமே இவ்வாறு முதலிடம் பெற்றுச் சாதித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த மாணவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பாடசாலை சமூகம் மகிழ்ச்சியையும் வெளியிட்டுள்ளனர் .