இலங்கைக்கு பயணிப்போருக்கு அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள பாதுகாப்பு எச்சரிக்கை !

எதிர்வரும் விடுமுறை காலத்தில் இலங்கைக்கு பயணம் செய்யும் தமது நாட்டவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரகம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது. இந்நிலையில், பொது இடங்களுக்கு செல்லும் அமெரிக்க பயணிகள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

சுற்றுலா இடங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள, கோவில்கள், விடுதிகள், வைத்தியசாலை, கலாசார நிகழ்வுகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கைக்கு செல்லும் அமெரிக்கர்கள் சில நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.